Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கல் மண்டபம்

Pillared-Mandapa

அமைவிடம்

கிருஷ்ணன் கோவில்


வரலாற்றுக்காலம்

நாயக்கர் காலம்


கூடுதல் விவரங்கள்

இந்தக் கல் மண்டபம் கிருஷ்ணன் கோவிலிலிருந்து திருவில்லிப்புத்தூருக்குச் செல்லும் வழியில், பக்தர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக, நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் 30 கல்தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 பக்கங்களில் 3 அடுக்குகளாக 12 புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு நடுவில் எண்பட்டை / பதினாறுபட்டை தூண் காணப்படுகிறது. மதுரை நாயக்கர் காலத் தூண் மண்டபம் என்பதால், கீழே நாகபந்தமும், மேலே போதிகைப் பகுதியில் பூமொட்டுப் போன்ற வடிவமைப்பும் உள்ளன. இவற்றுள் விலங்கு மற்றும் கடவுள் சிற்பங்கள், பூப்போன்ற வடிவங்கள், நடனமாடும் பெண்கள், இசைக்கருவிகளுடன் பூதகணங்கள் மற்றும் தவம் செய்யும் முனிவர்கள் போன்ற புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.

அக்காலத்தில் இதுபோன்ற பல மண்டபங்கள் முக்கியச் சாலைகளில் இருந்திருக்கலாம். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரைக் கோயில்களில் நடைபெறும் பூசைக்குப் பின்பே இந்த ஊர் மக்கள் உணவருந்தும் வழக்கம் இருந்ததாகவும், திருவில்லிப்புத்தூர், தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் இருந்த மண்டபங்களில் கட்டப்பட்டிருந்த மணிகள் ஒலிக்கப்பட்ட பின்பே இவர்கள் உணவருந்தியதாகவும் செவிவழிச் செய்தியாகக் கூறப்படுகிறது. மேலும் இச்சாலையைப் பயன்படுத்தும் பயணிகள் தங்கி ஓய்வெடுக்கும் இடமாகவும் பயன்பட்டு வந்துள்ளது.


ஊர்

பிள்ளையார் நத்தம்

மாவட்டம்

விருதுநகர்

தகவல்

முனைவர் கந்தசாமி

புகைப்படங்கள்

கௌதமன்

கௌதமன்

கௌதமன்

கௌதமன்

கௌதமன்

கௌதமன்

கௌதமன்

கௌதமன்

கௌதமன்