Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பேகம் கல்லறை

Begum’s Tomb

அமைவிடம்

திண்டுக்கல் - மதுரைச் சாலையில் அமைந்துள்ள பேகம்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள தர்கா


வரலாற்றுக்காலம்

ஐதர் அலி


கூடுதல் விவரங்கள்

பொது ஆண்டு 1772 முதல் 1782 வரை, ஐதர் அலி நியமித்த மீர் சாயிபுவின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் பகுதி இருந்துள்ளது. ஐதர் அலியின் உறவினரான அமீர் -உன்-நிசா-பேகம் என்பவரின் நினைவாக இந்தக் கல்லறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இவ்விடத்திலுள்ள பெர்சிய மொழிக் கல்வெட்டிலிருந்து அறிய முடிகிறது. அமீர் -உன்-நிசா-பேகம் அவர்களின் நினைவாக இந்தப்பகுதி ’பேகம்பூர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தத் தர்காவில் ஒரு சதுர அறையும் குவிமாட அமைப்பும் காணப்படுகின்றன. இக்கல்லறைக்கு அருகில் ஒரு பள்ளிவாசல் அமைந்துள்ளது.


ஊர்

பேகம்பூர்

மாவட்டம்

திண்டுக்கல்

தகவல்

க.த. காந்திராஜன்

புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்