Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பொதில் உடையார் சிவன் கோயில்

Pothil Udaiyaar Shiva Temple

வரலாற்றுக்காலம்

பொது ஆண்டு 1144, பாண்டியர் காலம் (மாறவர்மன் பராக்கிரம பாண்டியன்)


கூடுதல் விவரங்கள்

இந்த கோயில் இடைக்கால பாண்டியரான மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் (பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டு), ஏழாவது ஆட்சி ஆண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. கோயில் கல்வெட்டின்படி இது 'பொது உடையார் கோவில்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தற்போது விமானமில்லாத கருவறை மற்றும் ஒரு மண்டபத்துடன் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, தற்போது இது வழிபாட்டில் இல்லை.

இக்கோயில் தற்போது விமானமில்லாத கருவறை மற்றும் ஒரு மண்டபத்துடன், செந்நெல்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு ’சோனாட்டு முல்லை சூடினான் திருமாணிக்க நல்லூர்’ என்னும் பெயர் அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளதை, இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. தற்போது கல்வெட்டு மிகவும் மோசமான நிலையில் சிதைந்து காணப்படுகிறது. இக்கோவிலின் அதிட்டானத்திலும், முன் மண்டப தூண்களிலும் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. பிற்கால பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பத்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று கருவறையின் பின்புற சுவரில் காணப்படுகிறது. மேலும் இக்கற்றளியின் அருகே ஒரு கல்வெட்டுள்ள செக்கும் காணப்படுகிறது.


அமைவிடம்

செந்நெல்குடி


ஊர்

செந்நெல்குடி

மாவட்டம்

விருதுநகர்

தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்