Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பழனியாண்டவர் மடம்

Palaniāndavar Matta

வரலாற்றுக்காலம்

தற்காலக் கட்டுமானம்


கூடுதல் விவரங்கள்

பழனியாண்டவர் மடம் ஒரு செவ்வக வடிவத்திலான தற்கால கட்டடமாகும். இம்மடத்தில் ஒரு சுவற்றை ஒட்டி அமைந்துள்ள பீடத்தின் மேல் முருகர் சிலை காணப்படுகிறது. முருகர் கையில் வேலுடனும், தலையில் கிரீடத்துடனும் அருள் பாலிக்கிறார். இவரது பின்புறம் மயில் மற்றும் பாம்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. இப்பீடத்தின் இரு பக்கமும் சுவற்றில் துவாரப்பாலகர்கள் மற்றும் கந்தர்வர்களின் ஓவியங்களும், விநாயகர் மற்றும் ஐயப்பன் ஓவியங்களும் காணப்படுகின்றன. மற்றொரு சுவற்றில், ரிஷபத்தின் மேல் அமர்ந்த சிவன் மற்றும் பார்வதியின் ஓவியம் காணப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் முருகன் மற்றும் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதமிருக்கும் பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் கடைசியில் இந்த மடத்திற்கு வந்து, சாமி கும்பிட்டு, அர்ச்சனை செய்து விட்டு, எந்த கோயிலுக்கு செல்லவேண்டும் என வேண்டிக்கொண்டார்களோ, அந்த கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.


அமைவிடம்

ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.


ஊர்

வேப்படப்பு

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்