Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

திருமேனிநாதசுவாமி கோயில்

Thirumeninathaswamy Temple

வரலாற்றுக்காலம்

சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது.


கூடுதல் விவரங்கள்

திருமேனிநாததசுவாமி என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலில் கருவறை மற்றும் மண்டப அமைப்பு மட்டுமே காணப்படுகிறது. கருவறையின் மேல் பகுதியில் விமான, அமைப்பும் இல்லை, ஆனால் முன் மண்டபத்தின் மேல் முகப்பு அலங்காரம் காணப்படுகிறது. கோயிலைச் சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் கருவறைப் பகுதியில் பலிபீடம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. ஆறு தூண்களைக் கொண்ட முன் மண்டபத்தில் நாகர் சிற்பம் அமைந்துள்ளது.

பல காலம் முன்பு, ஒரு முனிவர் இவ்விடத்தில் வந்து தங்கியிருந்ததாகவும், அவர் இவ்விடத்திலேயே சமாதி ஆகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் அவரது நினைவாக இங்கு கோயில்/மடம் கட்டி இவ்வூர் மக்கள் வழிபடுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.


அமைவிடம்

ஊரின் பின்புறம் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது.


ஊர்

வேப்படப்பு

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

காணொலி

முனைவர்.மீ.மருது பாண்டியன்