Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

ஜாமியா மஸ்ஜித்

Jamia Masjid

அமைவிடம்

குள்ளபுரம் ஊரின் கிழக்கு பக்கம் உள்ளது.


வகை

மசூதி


ஊர்

குள்ளப்புரம்

மாவட்டம்

தேனி

திருவிழாக்கள் விவரங்கள்
ரம்ஜான், பக்ரீத் மற்றும் பிற இஸ்லாமிய விழாக்கள்/ பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1945
அமைப்பு
மசூதியின் மேல் மினார்/ மினாரெட் என அழைக்கப்படும் இரண்டு நீள் கோபுர அமைப்புகள் உள்ளன. இவை 8 அடுக்குகள் கொண்ட ஆறுகோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
ஜாமியா பள்ளிவாசல் பொது ஆண்டு 1945-46ல் கட்டப்பட்டுள்ளது. மசூதியின் மேல் இரண்டு மினார்/ மினாரெட் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து பாங்கு சொல்லப்படும், இது தொழுகைக்கு மக்களை அழைக்கும் ஒரு வழியாகும். கர்நாடக மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பள்ளிவாசல் ஒன்றின் பெயர் ஜாமியா பள்ளிவாசல். அதன் பெயரையே குள்ளப்பரதில் உள்ள இந்த பள்ளிவாசலுக்கு வைத்துள்ளனர். உறுது மொழி சொல்லான ‘ஜாமியா’ என்பதற்கு பல்கலைக்கழகம் என்று தமிழில் பொருள் கொள்ளப்படுகிறது. ஜாமியா என்றால் அழகானவர்கள் என்ற பொருளும் உள்ளது
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இதே ஊரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழர் கால கல்வெட்டும் பாண்டியர் கால கல்வெட்டுடைய பெருமாள் கோயிலும் சிவன் கோயில் ஒன்றும் உள்ளன.
செல்லும் வழி
ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளத்தில் இருந்து குள்ளபுரம் செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
ஆண்டிபட்டி மற்றும் தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
ஆண்டிபட்டி, தேனி மற்றும் பெரியகுளம்
புகைப்படங்கள்

ப.பிரதீப்