Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

அல்-பத்ர் மசூதி

Al-Badr Masjid

வகை

மசூதி


தலத்தின் சிறப்பு

கீழ கள்ளந்திரியில் உள்ள பெரிய மசூதி இதுவாகும்.


வழிபாட்டு முறை

இந்த மசூதியில் மத குருமார்கள் சார்பில் தொழுகையும் மத போதனைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் பள்ளிவாசலில் எந்த பிரிவினையும் இல்லாமல் மக்கள் ஒற்றுமையுடன் அனைத்து விழாக்களிலும் பங்கேற்கின்றனர். இந்த பள்ளிவாசலில் பெண்களுக்குத் தனி தொழுகை இடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மதத்தினர் மந்திரித்துக் கொள்வதற்காக எல்லா நாட்களும் மாலை வேளையில் மசூதிக்கு வருகின்றனர்.


ஊர்

கீழ கள்ளந்திரி

மாவட்டம்

மதுரை

வழிபாட்டுக் காலம்
தினந்தோறும் வழிபாடு நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
வருடத்திற்கு இரண்டு முறை பெருவிழா எனப்படும் ஹஜ் பெருநாள், நோன்பு பெருநாள் அனுசரிக்கப்படுகிறது. ஹஜ் பெருநாள் (பக்ரித்) அன்று குர்பானி எனப்படும் ஆடு பலியிடப் படுகிறது. இந்த ஹஜ் பெருநாள் வருட கடைசியில் கொண்டாடப்படுகிறது.
அமைப்பு
மினார் மற்றும் முகப்பு வளைவுடன் இம்மசூதி காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
மசூதியின் நோக்கம் இறைவனிடம் சரணடைதல் என்பதாகும். அமைதியின் இடமாகவும் மசூதி விளங்குகிறது. கீழ கள்ளந்திரி கிராமத்தில் அமைந்துள்ள இந்த மசூதியானது மக்கள் வழிபடுவதற்கும் மத போதனைகளுக்கும் ஏற்ப அமைந்துள்ளது. இங்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது என்பது இந்த வழிபாட்டு தளத்தில் மிக முக்கிய சிறப்பாக உள்ளது. பல தலைமுறைகளாக இவ்விடத்தில் இந்த மசூதி இயங்கி வருகிறது. மசூதியின் தொடக்க காலத்தில் குடிசையில் தொழுகப்பட்டு தற்போது பெரிய மசூதியாகவே கட்டப்பட்டுள்ளது.
தகவல்

முனைவர் துர்கா தேவி

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கள்ளந்திரி முத்தாலம்மன் கோயில்
செல்லும் வழி
கீழக்கள்ளந்திரி செல்லும் வழியில் சாலைக்கும் முன்புறமாகவே இந்த மசூதி அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கள்ளந்திரி பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

சையது முகமது/ஜென்சி

சையது முகமது/ஜென்சி

சையது முகமது/ஜென்சி

சையது முகமது/ஜென்சி

சையது முகமது/ஜென்சி

கேட்பொலி

சையது முகமது/ஜென்சி