Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

காட்டு நைனார் பள்ளிவாசல்

Kaattu Nainar Mosque

அமைவிடம்

கம்பம் புதுப்பட்டி ஊரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் வலப்பக்கம் உள்ளது.


வேறு பெயர்கள்

ஜும்மா பள்ளிவாசல்


வகை

இராவுத்தர் பள்ளிவாசல் பிரிவு


ஊர்

கம்பம் புதுப்பட்டி

மாவட்டம்

தேனி

தலத்தின் சிறப்பு
பெண்கள் தொழுவதற்குத் தனி இட வசதி செய்யப்பட்டிருக்கிறது .
வழிபாட்டு முறை
ஐந்து நேரம் வழிபடும் வழிபாட்டு முறை
வழிபாட்டுக் காலம்
அதிகாலை முதல் வழிபாடு தொடங்குகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
ரம்ஜான், பக்ரீத் மற்றும் பிற இஸ்லாமிய பண்டிகைகள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன
காலம்/ ஆட்சியர்
’நவாப் காலம்’ என்று இப்பகுதி மக்களால் பொதுவாகச் சொல்லப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
கவர்னர் இராவுத்தரின் நினைவுப் பலகை உள்ளது.
அமைப்பு
மினாரின்றித் தொழுகையிடம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்திற்கு முன் ஒரு மண்டபம் போன்ற அமைப்பும் உள்ளது.
சுருக்கம்
இக்காட்டு நைனார் பள்ளிவாசல், ’ஜும்மா பள்ளிவாசல்’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்பள்ளிவாசலில் தொழுகையிடம், அதற்கு முன் ஒரு மண்டபம் மற்றும் பெண்கள் தொழுவதற்குத் தனி இட வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. மினாரின்றி வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாசலில் கவர்னர் இராவுத்தர் என்ற சையது முகமது புகாரி சாகிபு (1886-1951 CE) என்பவருக்கு நினைவுக்கல் வைக்கப்பட்டுள்ளது. இக்காட்டு நைனார் பள்ளிவாசல் நவாப் காலத்தில் கட்டப்பட்டதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். ’நைனார்' என்பதற்குத் தலைவன் அல்லது நாயகன் என்ற பொருள் சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில், நவாப் காலத்தைச் சேர்ந்த ஒரு தலைவன் நினைவாக இப்பள்ளி வாசல் கட்டப்பட்டு இருக்கலாம். இது இராவுத்தர் பள்ளிவாசல் பிரிவைச் சார்ந்தது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
க.புதுப்பட்டி பெருமாள் கோவில், சிவன் கோவில் மற்றும் நூற்றாண்டு பழைமையான சி.எஸ்.ஐ. தேவாலயம்.
செல்லும் வழி
உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உத்தமபாளையம், புதுப்பட்டி, கம்பம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி, போடிநாயக்கனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உத்தமபாளையம், கம்பம்
புகைப்படங்கள்

பெ.பிரகாசம்

பெ.பிரகாசம்

பெ.பிரகாசம்