Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மழைவரம் வேண்டி பாடல்

Song in Prayer for rainfall

வகை

சடங்கு


பாடப்படும் இடம்

மழைவரம் வேண்டி பாடல் பாடும் பெண் தன் தலையில் மண்பானையை வைத்துக்கொண்டு பாடல் பாடிக்கொண்டே கோயிலுக்குச் செல்கிறார்.


பாடப்படும் சூழல்- காலம்

மழை பெய்யாத சூழலில் இப்பாடலை பாடி வழிபாடு செய்கின்றனர்.


பாலினம்

பெண்


ஊர்

கானப்பாடி

மாவட்டம்

திண்டுக்கல்

பாடல் விவரங்கள்

காரக் கோ சின்னமக்கோ

காத்தடுத்சு செத்தமக்கோ

கூர்க் கோ சின்னமக்கோ

கூத்தடத்சு செத்த மக்கோ

கள்ளி காட்டிற்கு மழைபெய

கத்தால காட்டிற்கு மழைபேய

நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் ஊரு செழிக்கணும் உத்தமலை வேணும்…. என்று பாடுகின்றனர்.

கூடுதல் விவரங்கள்

இவ்வூர் வழக்கப்படி ஒரு பெண் தன் தலையில் மண்பானையை வைத்துக் கொண்டு வீடு வீடாக சென்று சோறு மற்றும் தண்ணீரை வாங்குகின்றார். அனைத்து வீட்டிலும் வாங்கிய பின்னர் அந்தப் பானையை தலையில் வைத்துக் கொண்டு மழைவரம் வேண்டி பாடல் பாடிக் கொண்டு கோயிலுக்கு சென்று மண்பானையை வைத்துவிட்டு அனைத்து பெண்களும் ஒன்று கூடி மழை வரம் வேண்டி ஒப்பாரி வைத்து அழுக்கின்றனர்.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இந்த சடங்கு நடைபெறுகிறது. அதன் பின்னர் மூன்றாவது நாள், ஏழு கன்னிப் பெண்களை/ சிறுமிகளை நிற்க வைத்து அவர்களை கன்னிமார் தெய்வமாக பாவித்து சாமியை அழைக்கின்றனர். அதில் ஒரு பெண் குழந்தைக்கு சாமி வந்து, அந்தப் பெண் குழந்தை ’மழை வரும்’ என்று குறி சொல்வதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அனைத்து வீட்டிலும் வாங்கிய சாப்பாட்டை அனைவரும் உருண்டை பிடித்து சாப்பிட்ட பின்னர் அந்த மண் பானையை உடைத்து விட்டு வீட்டிற்கு செல்கின்றனர். இதுவே இவ்வூரின், மழைவரம் வேண்டி பாடல் பாடி நடத்தப்படும் சடங்காகும்.

தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

சீ.தாமோதரன்

சீ.தாமோதரன்

சீ.தாமோதரன்

கேட்பொலி

மழைவரம் வேண்டி பாடல்