Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கும்மிப்பாடல்

Gummi Folksong

வகை

கும்மி


பாடல் முறை

வாய்மொழிப் பாடல்


பாடப்படும் இடம்

கோயில் திருவிழாவின் பொழுது குறிப்பாக முளைப்பாறித் திருவிழாவின் பொழுது பாடப்படும்.


பாடப்படும் சூழல்- காலம்

பகல் மற்றும் இரவு வேளையில், முளைப்பாறியை கோயிலின் முன்பாக வைத்தபிறகு கும்மி பாடல் பாடப்படுகிறது.


ஊர்

சின்னாளபட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

பாலினம்
பெண்
பாடலின் கால அளவு
ஐந்து மணித்துளிகள் முதல் இருபது மணித்துளிகள் வரை பாடப்படும்.
பாடல் விவரங்கள்
ஒன்னாம் படியெடுத்து ஓரஓரமா பத்தரகாளிய பேச்சியம்மன மாரியம்மன,

சித்திரகோபுரம் கட்டவே, சித்திரகோபுரம் கட்டவே,

(ஆளாமனைக்கு) அழகர் தோப்புக்கு,

ஆத்தா வரா பூஞ்சோலைக்கு, ஆத்தா வரா பூஞ்சோலைக்கு

தந்தன நானினம், தந்தன நானினம், தந்தன நானினம், தந்தானே…

இரண்டாம் படியெடுத்து ஓரஓரமா பத்தரகாளிய .......
கூடுதல் விவரங்கள்
சின்னாளபட்டியில் கோயில் கொண்டுள்ள சவுடாம்பிகை அம்மன் கோயில் திருவிழாவின் பொழுது முளைப்பாரி எடுக்கும் சடங்கு நடைபெறும். அப்பொழுது அந்தக் கோயிலின் முன் பகுதியில் மக்கள் அனைவரும் இந்த கும்மிப் பாடலைப் பாடி, கும்மியாட்டம் நிகழ்த்துவர். இந்த விழாவில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொள்வர். இந்தக் கோயிலின் முன்பாக தெய்வ உருவச் சிலை அலங்காரம் செய்து வைக்கப்படும். பின்னர் சின்னாளபட்டியில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் அந்த தெய்வத்தை எடுத்துக் கொண்டு சென்று தங்கள் தெருக்களில் வைத்து வணங்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

தே.ராமச்சந்திரன்

தே.ராமச்சந்திரன்

கேட்பொலி

கும்மிப்பாடல் - கேட்பொலி எடுத்தவர்: தே.ராமச்சந்திரன்