Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

வழிபாட்டு பாடல்கள்

Devotional songs

வகை

வழிபாட்டு பாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு பாடல்கள் (கும்மி பாடல்கள், சுதந்திரப் போராட்ட பாடல்கள், மகாபாரதக் கதை பாடல்கள்).


பாடல் முறை

கும்மி பாடல்கள் துரித மெட்டில் பாடப்படும். இப்பாடல்கள் அனைத்தும் வாய்மொழியாக பாடப்படுவனவாகும்.


பாடப்படும் இடம்

குலமங்கலம் ஊர் மந்தை.


பாடப்படும் சூழல்- காலம்

கும்மி பாடல்கள் மற்றும் முளைப்பாரி பாடல்கள் ஆடி மாதம் முளைப்பாரி எடுக்கும்போதும், வைகாசி மாதம் முனியாண்டி கோயில் வழிபாட்டின் போதும், புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதம் புரவி எடுப்பு திருவிழாவின் போதும், தை மாதம் ராவுத்தப்பட்டி கோயில் வழிபாட்டின் போதும் பாடப்படும்.


ஊர்

குலமங்கலம்

மாவட்டம்

மதுரை

பாலினம்
ஆண்
பாடல் விவரங்கள்

இப்பாடல்களை இசைக்கருவிகள் இல்லாமல் பாடுகின்றனர். கும்மி பாடல்களைக் கைதட்டிக்கொண்டே பாடுவர்.

கூடுதல் விவரங்கள்

கேட்பொலி கோப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிபாட்டுப் பாடல்களின் விரங்கள் பின்வருமாறு (refer audio file) :

கும்மி என்பது தமிழ் நாட்டின் பழமையான நடனக் கலையாகும். பொதுவாக இசைக் கருவிகள் இல்லாமல், கைகளைத் தட்டும் ஒலியையே தாளமாகக் கொண்டு பலர் குழுவாக வட்டமிட்டு ஆடும் நடனமே கும்மி எனப்படும். குழுவில் ஒரு பெண் அடியெடுத்துப் பாட, மற்றவர்கள் பின்பாட்டு பாடி, ஒன்றுசேர நடனம் ஆடுவர். பாடல் மெட்டுக்கு ஏற்ப கைகளால் தாளமிட்டு, அசைவுகளோடு ஆடப்படும் கும்மியில் பெறும்பாலும் பெண்கள் பங்கேற்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆண்களும் இதில் பங்கு பெறுகின்றனர். கும்மியடித்தலுக்கென்றே தனியாக கும்மிப் பாட்டு செவிவழியாக பல தலைமுறைகளாக சொல்லப்பட்டு, மக்களால் பாடப்பட்டு வருகிறது.

திருவிழா காலங்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பல வகையான வழிபாட்டுப் பாடல்கள் பாடப்படும். குறிப்பாக முளைப்பாரி எடுக்கும்போதும் கும்மி பாடல்கள் பாடப்படும். இப்பாடல்கள் பெரும்பாலும் எழுதி வைத்துப் பாடப்படுவன அல்ல. வழிவழியாகத் தங்கள் முன்னோர்களிடம் இருந்து செவிவழியாக இப்பாடல்களை இவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பாடல்கள் இவ்வூர் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளன.

தகவல்

முனைவர் மகாலிங்கம்

கேட்பொலி

கும்மிப்பாடல் - ஒலிப்பதிவு:P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

கும்மிப்பாடல் - ஒலிப்பதிவு: P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி