வகை
வழிபாட்டு பாடல் மற்றும் கும்மி பாடல்.
பாடப்படும் சூழல்- காலம்
திருவிழா காலங்களில்
பாலினம்
பெண்
பாடலின் கால அளவு
1 முதல் 3 நிமிடங்கள் வரை நீளமுள்ள பாடல்கள்
ஊர்
அழகாபுரி
மாவட்டம்
மதுரை
கேட்பொலிக் கோப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வகைகளின் விவரங்கள் பின்வருமாறு (refer audio file) :
தமிழர்களின் வாழ்வில் இசை என்றுமே ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்றபாடல் வடிவங்கள் தமிழில் உள்ளன. திருவிழா காலங்களில் பல வகையான வழிபாட்டுப் பாடல்கள் பாடப்படும். குறிப்பாக முளைப்பாரி எடுக்கும்போதும் கும்மி பாடல்கள் பாடப்படும். கும்மி என்பது தமிழ் நாட்டின் பழமையான நடனக் கலையாகும். பொதுவாக இசைக் கருவிகள் இல்லாமல், கைகளைத் தட்டும் ஒலியையே தாளமாகக் கொண்டு பலர் குழுவாக வட்டமிட்டு ஆடும் நடனமே கும்மி எனப்படும். குழுவில் ஒரு பெண் அடியெடுத்துப் பாட, மற்றவர்கள் பின்பாட்டு பாடி, ஒன்றுசேர நடனம் ஆடுவர். பாடல் மெட்டுக்கு ஏற்ப கைகளால் தாளமிட்டு, அசைவுகளோடு ஆடப்படும் கும்மியில் பெறும்பாலும் பெண்கள் பங்கேற்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆண்களும் இதில் பங்கு பெறுகின்றனர். கும்மியடித்தலுக்கென்றே தனியாக கும்மிப் பாட்டு செவிவழியாக பல தலைமுறைகளாக சொல்லப்பட்டு, மக்களால் பாடப்பட்டு வருகிறது.
இந்த வாய்மொழி பாடலைப் பாடியவர்களுள் ஒருவர் பெயர் சின்னபொண்ணு என்பதாகும். இவர் உள்ளூரில் திருவிழா காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதாக கூறுகிறார்.
முனைவர் மகாலிங்கம்
கும்மி பாடல்- ஒலிப்பதிவு: P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி