Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

வெம்பக்கோட்டை அகழாய்வுத்தளம்

Vembakottai Excavation Site

அமைவிடத்தின் பெயர்

மேட்டுக்காடு


பண்பாட்டுக் காலம்

சங்கக் காலம்


கிடைத்த தொல்பொருட்கள்

மண்பானை ஓடுகள், சங்கு வளையல்கள், செங்கற்கள், குறியீடுகள், பழங்கால மக்களின் பயன்பாட்டுப் பொருட்கள், நாணயங்கள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த பாசிமணிகள், தங்க அணிகலன்கள், வட்டச் சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளன.


ஊர்

விஜயகரிசல்குளம்

மாவட்டம்

விருதுநகர்

கூடுதல் விவரங்கள்
தமிழ்நாடு தொல்லியல் துறை பொது ஆண்டு 2022 முதல் மூன்று கட்டங்களாக வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு நடத்தி வருகிறது. இந்த அகழாய்வின் மூலம் வைப்பாற்றங்கரையில் வாழ்ந்துவந்த பழங்கால மக்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. முதல் இரண்டு கட்டங்களில் 3500க்கு மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மூன்றாம் கட்டமாக விஜயகரிசல்குளம் பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வில் சுமார் 8000 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டை பகுதியில் ஏற்கெனவே நுண் கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. தற்போது அகழாய்வுகளின் மூலம் பானையோடுகள், செங்கற்கள், குறியீடுகள், பழங்கால மக்களின் பயன்பாட்டுப் பொருட்கள், சுடுமண் உருவ பொம்மை, அரிய சூது பவள மணிகள் (கார்னேலியன்), கீரல் பொறிப்பு கொண்ட சூது பவளம் (இண்டாக்லியோ), நாணயங்கள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த பாசிமணிகள், தங்க அணிகலன்கள், சங்கு வளையல், வட்டச் சில்லுகள், திமிலுடைய காளையின் உருவ பொம்மை, சுடுமண்ணாலான மனித உருவத்தின் கால் பகுதி, சுடுமண் சிற்பத்தில் மனித தலை, பானை ஓடுகள், பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள் (வல்லாட்டம்/ சதுரங்கம்), முத்துமணிகள், போன்ற தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வைப்பாற்றின் வடகரை மேடு சங்கு வளையல்கள் உருவாக்கும் தளமாக இருந்துள்ளது என்பதும் அகழாய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தகவல்

முனைவர் கந்தசாமி

புகைப்படங்கள்

கந்தசாமி

கந்தசாமி

கந்தசாமி