Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்

Megalithic Structures

அமைவிடத்தின் பெயர்

நரசிங்கம்பட்டி


பண்பாட்டுக் காலம்

பெருங்கற்காலம்


கிடைத்த தொல்பொருட்கள்

ஈமச்சின்னங்கள்


ஊர்

நரசிங்கம்பட்டி

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
நரசிங்கம்பட்டி பெருமாள்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இவ்விடத்தில் குத்துக்கற்கள், கல்திட்டைகள், கற்பதுக்கை, தாழிகள் மற்றும் கல்வட்டம் போன்ற பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிலப்பரப்பின் மேலே கல்வட்டங்கள், குத்துக்கற்கள், கல்திட்டைகள் ஆகியவை உள்ளன. நிலப்பரப்பின் கீழ் முதுமக்கள் தாழிகளும், கற்பதுக்கைகளும் உள்ளன. எனவே, இவ்விடம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்தவர்களின் இடுகாடாக இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. இப்பகுதி மக்கள் இவ்விடத்தை “எமக்கோவில்” என்று அழைக்கின்றனர். இச்சொல் “ஈமக்கோவில்” என்ற சொல்லிலிருந்து மருவியிருக்கலாம் என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.
தகவல்

முனைவர் துர்கா தேவி

குறிப்புகள்
V.வேதாசலம், தொல்பொருள் ஆய்வாளர்(ஓய்வு)
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி