Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மாலை தொடுத்தல்

Flower garland making

வகை

மாலை கட்டுதல்


கைவினைப் பொருளின் பெயர்

மலர் மாலைகள்


கைவினைக் கலைஞர் பெயர்

வரிசை, தமிழ் அன்பன், சுரேந்திரன், இராமநாதன் ஆகியோர் இத்தொழிலை 30-40 ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.


பயன்பாடுகள்

தெய்வ வழிபாடுகள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் மலர் மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன.


ஊர்

நிலக்கோட்டை

மாவட்டம்

திண்டுக்கல்

காட்சிப்படுத்தப்படும் இடம்
நிலக்கோட்டை
கூடுதல் விவரங்கள்
நிலக்கோட்டைப் பகுதியில் பூக்கட்டும் பண்டாரம் மக்களால் செய்யப்பட்ட மாலை தொடுத்தல் தொழிலானது இப்போது அனைத்து இன மக்களும் செய்யக்கூடிய தொழிலாக மாறியுள்ளது. பூக்கள் வாழை நார்களால் கட்டப்படுகின்றன. மாலையின் அகலத்திற்கு ஏற்ப இரண்டு முதல் ஐந்து நார்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாசிப்பச்சை, செவ்வந்தி, சம்பங்கி, மல்லிகை, கோழிக் கொண்டைப்பூ ஆகியவை பூமாலை கட்டுவதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பூக்கள் நிலக்கோட்டையில் உள்ள பூச்சந்தையில் இருந்து வாங்கப்படுகின்றன. இந்தப் பூச்சந்தை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்குகிறது. இவர்கள் தயாரிக்கும் பூ மாலைகளின் எடை ஒன்று முதல் நான்கு கிலோ வரை உள்ளது. கல்யாணப் பூ மாலை செய்வதற்கு 5 கிலோ சம்பங்கி தேவைப்படுகிறது. விழாக் காலங்களுக்கு ஏற்பப் பூ மாலைகளின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. மலைக்கோட்டைப் பகுதியில் தயாரிக்கப்படும் பூ மாலைகளில் மாசிப் பச்சை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூக் கடையில் மூன்று வகையான நீளமுள்ள மாலைகள் விற்கப்படுகின்றன.
தொழில் முறை
சிறு /குறு தொழில்
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

காணொலி

மு.சாந்தி