Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கூடை பின்னுதல்

Bamboo Baskets Weaving

வகை

கூடை பின்னுதல் (மூங்கில், பனை, கோரை மற்றும் பிற)


கைவினைப் பொருளின் பெயர்

மூங்கில் கூடைகள்


கைவினைக் கலைஞர் பெயர்

கவிதா, மல்லிகா, முருகன் ஆகியோர்.


பயன்பாடுகள்

பொதுவாக, இந்த மூங்கில் கூடைகள் பூக்கூடை, நடவுக் கூடை, வயல் வேலைகளுக்கான பராமரிப்புப் பொருட்களை வைக்கும் கூடைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.


ஊர்

மேட்டுப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

காட்சிப்படுத்தப்படும் இடம்
திண்டுக்கல் - மேட்டுப்பட்டி
கூடுதல் விவரங்கள்
மூங்கில் கூடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகின்றனர். இத்தொழில் இவர்களின் பரம்பரைத் தொழிலாக விளங்குகிறது. எனினும் அண்மைக்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததனால், மூங்கில் கூடைகளுக்கான தேவைகள் குறைந்துள்ளன. இதனால் இவர்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கூடை பின்னுவதற்குப் பயன்படும் மூங்கில் மற்றும் பிற மூலப் பொருட்கள் தனியாக விலைக்கு வாங்கப்படுகின்றன. இவர்கள் தக்காளிக் கூடை, உருண்டைக் கூடை, தட்டு, பூக்கூடை, கோழி அடைக்கும் கூடை, பஞ்சாரம், முறம் போன்ற வடிவங்களில் கூடைகளைத் தயாரிக்கின்றனர்.
தொழில் முறை
குடிசைத் தொழில்
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

வெ.நா.ஜோதிகா

வெ.நா.ஜோதிகா

வெ.நா.ஜோதிகா

வெ.நா.ஜோதிகா

வெ.நா.ஜோதிகா

வெ.நா.ஜோதிகா

காணொலி

வெ.நா.ஜோதிகா