Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கட்டில் பின்னுதல்

Making of Rope Beds

வகை

கூடை பின்னுதல்


கைவினைப் பொருளின் பெயர்

கட்டில்


கைவினைக் கலைஞர் பெயர்

விஜயா, 15 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.


காட்சிப்படுத்தப்படும் இடம்

கட்டில் பின்னுதல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பெரும்பாலும் தங்கள் வீடுகளிளேயே அவற்றை விற்பனைக்கு காட்சிப்படுத்துகின்றனர்.


ஊர்

சின்னாளப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

கூடுதல் விவரங்கள்
கட்டில் பின்னுதல் என்பது, மரக் கட்டில் அல்லது இரும்புக் கட்டிலின் மீது கயிறுகள் அல்லது நைலான் கயிறுகளைக் கொண்டு, ஒரு வலிமையான மற்றும் வசதியான படுக்கைப் பரப்பை உருவாக்கும் ஒரு பாரம்பரிய கைவினை நுட்பமாகும்.

சின்னாளப்பட்டி, மதுரை மற்றும் சித்தையன்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து கட்டில் சட்டகங்கள் இங்கு அனுப்பப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கயிறுகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் முறையிலும் கயிறுகளை ஒன்றோடொன்று பின்னுகிறார்கள். இந்த பின்னல்முறை, படுக்கைப் பரப்பு நன்கு இறுக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது. இத்தொழிலாளர்கள் கட்டிலின் நீளமாக பின்னும் வேலையை செய்கிறார்கள். குறுக்கே உள்ள கயிற்றை பின்னும் வேலையை வெளியே ஆட்களிடம் கொடுத்து செய்து கொள்கிறார்கள். சின்ன கட்டில், பெரிய கட்டில், ரிங் கட்டில் என்று மூன்று வகைக் கட்டில்களை இவர்கள் தயாரிக்கின்றனர். இக்கட்டில்களின் பலம், பின்னப்பட்ட கயிற்றின் உறுதியுடன் இணைந்து படுக்கைக்கு அதிக ஆயுளைத் தருகிறது.
தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

மு.காவியப்பிரியா

மு.காவியப்பிரியா

மு.காவியப்பிரியா

மு.காவியப்பிரியா

கேட்பொலி

மு.காவியப்பிரியா