Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மட்பாண்டம் வனைதல் மற்றும் சுடுமண் சிற்பம் தயாரித்தல்.

Making of Pottery and Terracotta Sculptures

வகை

மட்பாண்டம் / சுடுமண் சிற்பம்


கைவினைப் பொருளின் பெயர்

மண்பாண்டம்


கைவினைக் கலைஞர் பெயர்

சி. வேலம்மாள்.

இவர் சுமார் 50 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறார். மட்பாண்டங்கள் மற்றும் மண் சிலைகள் தயாரிப்பது இவர்களின் குடும்பத் தொழிலாக இருந்து வருகிறது.


பயன்பாடுகள்

சமையல் செய்யப் பயன்படும் மட்பாண்டங்கள் மற்றும் வழிபாட்டிற்கான சிலைகள்.


ஊர்

வெளிச்சநத்தம்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
இந்த மட்பாண்டக் கலைஞர் பானை, ஜாடி, கூஜா, பணியார தட்டு, அடுப்பு போன்ற பல வகையான வீட்டு உபயோக பொருட்களை தன் கைகளாலேயே வனைந்து அவற்றை சூட்டு தயார் செய்கிறார். மேலும் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் இறை உருவ சிற்பங்களையும், எவ்வித ஆடம்பரமான உபகரணங்களையும் பயன்படுத்தாமல், இவர் தன் கைகளாலேயே வடிவமைக்கிறார். பிறகு அவற்றை காய வைத்து, சுட்டு எடுத்த பின் அவற்றிற்கு வண்ணம் தீட்டுகிறார். குறிப்பாக முத்தாலம்மன், நாச்சியம்மன், கருப்புசாமி, புரவி (குதிரை) போன்ற சிற்பங்களைத் தயார் செய்து உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பதாக தெரிவிக்கிறார். திருவிழாக் காலங்களை ஒட்டி நேர்த்திக்கடன் சிற்பங்கள் தயார் செய்யப்படுகின்றன. பிற சாதாரண நாட்களில் வீட்டு உபயோகத்திற்கு தேவையான மட்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தொழில் முறை
குடிசைத் தொழில்
தகவல்

முனைவர் மகாலிங்கம்

புகைப்படங்கள்

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

கேட்பொலி

M. ராஜேஸ்வரி