Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

சி.எஸ்.ஐ தெய்வீக அன்பில் ஆலயம்

C.S.I. Divine Love Church

தேவாலயத்தின் வகை

தென்னிந்தியத் திருச்சபை


வேறு பெயர்கள்

சி.எஸ்.ஐ ச்ர்ச் ஆஃப் லவ் டிவைன்


அமைவிடம்

க. புதுப்பட்டியில் சர்ச் தெருவில் அமைந்துள்ளது.


ஊர்

க. புதுப்பட்டி

மாவட்டம்

தேனி

வழிபாடு
தொழுகை, ஞாயிறு பள்ளி, சர்ச் கொயர், இறைவனின் திரு விருந்து, புனித நற்கருணை காலை மற்றும் மாலை வழிபாடு, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் புனித ஞானஸ்நானம் ஆகிய வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
வழிபாட்டுக் காலம்
ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
இயேசு கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, ஆங்கில வருடப்பிறப்பு, ஈஸ்டர் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1855
ஆலய வரலாறு / கதைகள்
சி.எஸ்.ஐ தெய்வீக அன்பில் ஆலயத்தின் பழைய தேவாலய கட்டடம் மதுரா மிஷன் அமைப்பின் மூலமாக, பொது ஆண்டு 1855ல் கட்டப்பட்டிருக்கிறது. பொது ஆண்டு 1928ல் இங்கு புதிய சர்ச் கட்ட வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பின்னர் 1951ல் கனம் லார் பியர்துரை அவர்கள் முயற்சியால் அது கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் 2010ல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
நீலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் பெருமாள் கோயில்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கம்பம் மற்றும் உத்தமபாளையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி மற்றும் போடி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
கம்பம் மற்றும் உத்தமபாளையம்
புகைப்படங்கள்

பெ. பிரகாசம்

பெ. பிரகாசம்