Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

புரட்டாசித் திருவிழா

Purattasi Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

வேளாண்மை செழிக்கச் சடையாண்டி சாமிக்குப் படையல் வைக்கப்படுகிறது.


நடைபெறும் இடம்

அய்யம்பாளையத்தில் உள்ள சடையாண்டி கோயிலில் நடைபெறுகிறது.


நடைபெறும் தருணங்கள்

புரட்டாசி மாதம் இரண்டாவது வாரம் கொண்டாடப்படுகிறது.


ஊர்

அய்யம்பாளையம்

மாவட்டம்

திண்டுக்கல்

பாலினம்
ஆண்
விழாவின் தொன்மை
சுமார் 600 ஆண்டுகள் பழைமையான திருவிழாவாகக் கருதப்படுகிறது.
பலியிடல்
திருவிழாவின் போது ஆடுகளையும் சேவல்களையும் பலியிடும் வழக்கம் உள்ளது.
நேர்த்திக்கடன்
சடையாண்டி சாமிக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள், வெட்டிப் பலி கொடுக்கப்படுகின்றன. சடையாண்டி சாமியை வழிபட்ட பின்பு இக்கறி உணவினை படையலாக படைத்து விட்டு உண்ணுகின்றனர்.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
பறை மற்றும் மேளம் இசைக்கப்படுகின்றது.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
சடையாண்டி கோயிலில் உத்தரவு கேட்ட பின்னரே ஊர்த் தெய்வ வழிபாடு நடைபெறுகின்றது. இந்தப் பழக்கம் இந்தப் பகுதிகளில் பல காலமாக நடைமுறையில் உள்ளது. காலையில் சாமிப் பெட்டி ஊர்வலம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவில் கிடாய் வெட்டுதல் நடைபெறுகிறது. பின்பு சமைத்த உணவைச் சாமிக்குப் படையலாக வைக்கின்றனர். நள்ளிரவில் அன்னதானம் அளிக்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
சாமிப் பெட்டி ஊர்வலத்தைத் தொடர்ந்து, அசைவப் படையல் படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகின்றது. இவ்வூர் வழக்கப்படி, இந்த வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர்.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்