Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மீன்பிடித் திருவிழா

Fishing festival

வகை

பிற


திருவிழாவின் பயன்

மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை விழாவையொட்டி ஒன்று கூடுகின்றனர்.


நடைபெறும் இடம்

நல்லாம்பட்டியில் உள்ள இராஜாக் குளத்தில் நடைபெறுகிறது.


நடைபெறும் தருணங்கள்

நீர்நிலை வற்றும் போது மீன்பிடித்திருவிழா நடைபெறும்.


ஊர்

நல்லாம்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

பாலினம்
பொது
பொறுப்பாளர்
ஊர்
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
நல்லாம்பட்டி கிராமத்தில் உள்ள இராஜா குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நீர்நிலை வற்றும் போது மீன் குஞ்சுகள் வாங்கி விடப்படுகின்றன. மழைக் காலங்களில் அவை பல்கிப் பெருகுகின்றன. பின்னர் கோடைக் காலத்தில் நீர் மறுபடியும் வற்றும் பொழுது அவற்றை பிடிக்கும் வழக்கமாக இந்த மீன்பிடித் திருவிழா நடைப் பெறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இத்திருவிழாவில் கலந்துகொண்டு மீன்களைப் பிடித்து மகிழ்கின்றனர். இவ்விழாவின் போது ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி மீன் பிடிப்பதால் அவர்களிடையே ஒற்றுமை கூடும் எனக் கருதப்படுகிறது. மீன்பிடித் திருவிழா முடிந்தவுடன் மீண்டும் மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்