Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

தனித் தூண்க் கல்வெட்டு

Stone Pillar Inscription

அமைவிடம்

ஆண்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட ரோசனைப்பட்டியிலிருந்து வடக்குப் பக்கமாகப் பிராதுகாரன்பட்டிக்குச் செல்லும் சாலையில் ஓரமாக உள்ளது


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 12-13ஆம் நூற்றாண்டு


ஊர்

ரோசனைப்பட்டி

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
இங்குக் காணப்படும் தூண் கல்லில் 7 வரி கல்வெட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. கிளாங்குடியைச் சேர்ந்த தேவர் தொண்டைமானார் திருப்புவனகோன் நாகன் அங்கராயன் என்பவன் கொடுத்த கொடையைப் பற்றி இதில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டில் ’கிளாங்குடி’ என்று குறிப்பிடப்பட்டுள்ள இடம் இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அவ்வூரைச் சேர்ந்த தொண்டைமான் என்று அழைக்கப்படும் நாடாள்வார்கள் அழநாட்டில் குடியேறி, இன்றைய கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளை நிர்வாகம் செய்து வந்தனர். பொது ஆண்டு 11ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இவர்கள் நாடாள்வார்களாக இருந்துள்ளனர். இவர்களுள் ஒருவரான அங்கராயன் என்பவன் பொது ஆண்டு 12-13ஆம் நூற்றாண்டில் கொடுத்த தானத்தைப் பற்றிக் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது எனக் கருதலாம்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்