Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மடைத் தூண் கல்வெட்டு

Sluice Pillar Inscription

அமைவிடம்

தோணுகால் கண்மாய்


மொழியும் எழுத்தும்

தமிழ், வட்டெழுத்து


காலம் / அரசன்

இராஜராஜ சோழன்


ஊர்

தோணுகால்

மாவட்டம்

விருதுநகர்

ஆட்சி ஆண்டு
17 ஆவது ஆண்டு
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 1002
கூடுதல் விவரங்கள்
தோணுகால், காரியாபட்டிக்கும் கல்குறிச்சிக்கும் இடையில் உள்ள சிற்றூர் ஆகும். இவ்வூரின் கண்மாயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு மடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள இரண்டு மடைக்கல் தூண்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதல் மடையில் உள்ள இராஜராஜ சோழரின் 17ஆவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில், மங்குன வெண்டீசன் என்னும் பூங்கா நாட்டுக்கோன் என்பவர், குளங்கண்டு மடையை அமைத்துள்ள செய்தி வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளது. மற்றொரு மடைக் கல்வெட்டில் ’வரகுண பாண்டிய பூங்கா நாட்டுக்கோன்’ என்று எழுதப்பட்டுள்ளது. இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள ’பூங்கா நாடு’ என்பது பாலவநத்தம் பகுதியை உள்ளடக்கியதாகும்.
தகவல்

முனைவர் கந்தசாமி

குறிப்புகள்
புத்தகம் - "வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்", பக்கம்-239
புகைப்படங்கள்

முருகேசன்

முருகேசன்

முருகேசன்

முருகேசன்