Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கோயில் மண்டபக் கல்வெட்டுக்கள்

Temple Mandapa Inscriptions

அமைவிடம்

பர்மா காலனி பிள்ளையார் கோயில் கருவறை, தென்புறச்சுவர்


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

1ஆம் கல்வெட்டு - பொது ஆண்டு 14ஆம் நூற்றாண்டு, பிரபவ ஆண்டு

2ஆம் கல்வெட்டு - பொது ஆண்டு 19ஆம் நூற்றாண்டு

3ஆம் கல்வெட்டு - பொது ஆண்டு 1632 , சகம் 1554, ஆங்கிரச, தை 10.

4ஆம் கல்வெட்டு - பொது ஆண்டு 19ஆம் நூற்றாண்டு, சீலக வருஷம், ஆவணி.

5ஆம் கல்வெட்டு -பொது ஆண்டு 1886, திசம்பர், 23 .


ஊர்

பர்மா காலனி

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
பர்மாகாலனி என்பது மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது சிந்தாமணி ஊராட்சிக்கு உட்பட்டது. மதுரை, திருப்புவனம், திருமங்கலம், சோழவந்தான் ஆகியவை பர்மாகாலனிக்கு அருகிலுள்ள ஊர்களாகும்.

1 ஆம் கல்வெட்டு - பிள்ளையார் கோயில் கருவறைத் தென்புறச் சுவற்றில் காணப்படும் இக்கல்வெட்டு இங்குள்ள விநாயகர் கோவிலில் திருப்பணி செய்தவர்கள் பற்றிய செய்தியைக் கூறுகிறது.

2 ஆம் கல்வெட்டு - இவ்வூரைச் சேர்ந்த பின்னையத்தேவன், அவர் மனைவி செவனாயி ஆகியோர் மண்டபத் திருப்பணிசெய்து, சுமைதாங்கிக் கல் ஒன்றை வைத்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

3 ஆம் கல்வெட்டு - திருமலை நாயக்கரின் நன்மைக்காக அவரது தம்பி முத்து கிருஷ்ணநாயக்கர் செய்த தர்மம் பற்றிய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

4 ஆம் கல்வெட்டு - இக்கோயில் திருவாசியில் காணப்படும் இந்தக் கல்வெட்டு கல்யாண சுந்தரேஸ்வர சுவாமிக்கு நக்ஷதிர தீபம் உபயம் செய்யப்பட்ட்தைக் கூறுகிறது.

5 ஆம் கல்வெட்டு - இக்கோயில் திருவாசி மண்டபத்தில் காணப்படும் இந்தக் கல்வெட்டு திருவாசி தீபம் அளித்தமைப் பற்றி கூறுகிறது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
இந்தக் கல்வெட்டுக்கள் ஆவணம் இதழ் 2015ஆம் ஆண்டு தொகுதி எண் 26 இல், பக்கம் எண் 191-193இல் வெளிவந்துள்ளது.
புகைப்படங்கள்

திரு. உதயக்குமார், முனைவர் பா.ஆத்மநாதன்

திரு. உதயக்குமார், முனைவர் பா.ஆத்மநாதன்

திரு. உதயக்குமார், முனைவர் பா.ஆத்மநாதன்

திரு. உதயக்குமார், முனைவர் பா.ஆத்மநாதன்

திரு. உதயக்குமார், முனைவர் பா.ஆத்மநாதன்

திரு. உதயக்குமார், முனைவர் பா.ஆத்மநாதன்

திரு. உதயக்குமார், முனைவர் பா.ஆத்மநாதன்

திரு. உதயக்குமார், முனைவர் பா.ஆத்மநாதன்

திரு. உதயக்குமார், முனைவர் பா.ஆத்மநாதன்