Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பாறைக் கல்வெட்டு

Rock Inscription

அமைவிடம்

கோம்பை ஊருக்கு அருகில் உள்ள புதுக்குளத்தில் உள்ள தனியார் நிலத்தில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

பிற்கால பாண்டியர் காலம்


ஊர்

கோம்பை, குசவம்பட்டி

மாவட்டம்

தேனி

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
குசவம்பட்டி ஊருக்கு கிழக்கே உள்ள முத்தாலம்மன் குளத்திற்கு தென்மேற்காக அமைந்திருக்கும் ஒரு தனியார் நிலத்தில் உள்ள சிறிய பாறை எல்லைக்கல்லாக மாற்றப்பட்டு அதில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இக்கல்லின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன், சங்கு, சக்கரம், நாமம் போன்ற வடிவங்கள் காணப்படுகின்றன. பூலான்துறை இரசன் திருவிடையாட்டமான மலப்பட்டி என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் இருந்து அழிந்து பட்ட மலைப்பட்டி என்ற ஊரே கல்வெட்டில் மலப்பட்டி என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். இது பூலான்துறை சிவன் கோயிலுக்கு தானமாக தரப்பட்டது என்ற செய்தி வெட்டப்பட்டுள்ளது. பூலான் துறை சிவன் கோயில் என்பது இன்று இருக்கக்கூடிய சின்னமனூர் சிவன் கோயிலாகும். கல்வெட்டின் எழுத்து அமைதியின் அடிப்படையில் இது பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ம. ரேவன்

ம. ரேவன்

ம. ரேவன்