Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

தனிக் கல்வெட்டு

Stone Plaque Inscription

அமைவிடம்

தேவதானப்பட்டியிலிருந்து காமாட்சி அம்மன் கோயில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 1928


ஊர்

தேவதானப்பட்டி

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
கல்வெட்டின் முதல் வரியில் காமாட்சி அம்மன் துணை என்று எழுதப்பட்டுள்ளது. தேவதானப்பட்டியில் உள்ள அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலுக்காக முன்மண்டபம் ஒன்றைக் கட்டிக்கொடுத்த தேசாதிபதி ஆ. திருமலையன் அவர்களின் மகன்களால் ஏற்படுத்தப்பட்ட தண்ணீர் பந்தல் ஒன்றைப் பற்றி இக்கல்வெட்டில் சொல்லப்படுகிறது. மேலும் இக்கல்வெட்டு பிரபவ ௵ மாசி ௴ வெட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நிகரான ஆங்கில தேதி 1928 பிப்ரவரி 23 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் 'சமாதி’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இக்கல்வெட்டு தேசாதிபதி திருமலையன் அவர்களின் சமாதியில் பொறிக்கப்பட்டுள்ளதாக கருதலாம்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ம. ரேவன்

ம. ரேவன்

காணொலி

ம. ரேவன்