Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

தனித் தூண்க் கல்வெட்டு

Free standing stone slab Inscription

அமைவிடம்

தாடிக்கொம்புக்கு அருகிலுள்ள அகரம்


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

கிருஷ்ணதேவ மகாராயர்


ஊர்

அகரம்

மாவட்டம்

திண்டுக்கல்

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 1522
கூடுதல் விவரங்கள்
திண்டுக்கல்லிலிருந்து கரூவூருக்குச் செல்லும் பண்டைய பெருவழியில் இவ்வூர் உள்ளது. இவ்விடத்தில் மன்னர் கிருஷ்ணதேவ மகாராயர் காலத்தைச் சேர்ந்த, பொது ஆண்டு 1522ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு கிருஷ்ணதேவராயருக்குப் புண்ணியமாகப் பொட்டி பொம்மைநாயக்கனூர், கொண்டசமுத்திரம் ஆகிய இரண்டு ஊர்களைத் தானமாகத் தந்ததைத் தெரிவிக்கிறது. கிருஷ்ணதேவராயர் காலத்திற்கு முன்பு குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை சிதைவுற்றது என்றும், பொது ஆண்டு 1522இல் மீண்டும் இவ்வணை புதுப்பித்துக் கட்டப்பட்டு அதிலிருந்து 'காவிரிவல்லவன் வாய்க்கால்' என்ற பெயரில் வாய்க்கால் ஒன்று வெட்டப்பட்டது என்றும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. தெலுங்குபேசும் மக்களின் குடியேற்றத்தால் ’தாடிக்கொம்பு’ என்ற தெலுங்குப் பெயர் இவ்வூருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். தாடிக்கொம்பு என்பதற்கு பனைக்கூட்டம் என்று பொருள் (தாடி = பனை, கொம்பு = கூட்டம்) இதனால் புராண வரலாற்றிலும் இவ்வூர்க்குத் 'தாலவனம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏனெனில் ’தாலம்’ என்பது பனையை, குறிப்பாகக் கூந்தல்பனையைக் குறிக்கும் சொல்லாகும்.
தகவல்

க.த. காந்திராஜன்

குறிப்புகள்
திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு (2007)
புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்