Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கண்மாய்க் கல்வெட்டு

Irrigation Tank Inscription

அமைவிடம்

திருவாதவூர் கண்மாய்/ பாசன ஏரியின் மடைத்தூணில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

பிற்காலப் பாண்டியர் காலம்,

1ஆம் கல்வெட்டு- மூன்றாம் குலோத்துங்க சோழன்

2ஆம் கல்வெட்டு- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்


ஊர்

திருவாதவூர்

மாவட்டம்

மதுரை

ஆட்சி ஆண்டு
1ஆம் கல்வெட்டு- 17 ஆவது ஆட்சி ஆண்டு

2ஆம் கல்வெட்டு- 9ஆவது ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு
1ஆம் கல்வெட்டு-பொது ஆண்டு-1195

2ஆம் கல்வெட்டு- பொது ஆண்டு-1225
கூடுதல் விவரங்கள்
திருவாதவூர் ஏரியில் உள்ள மடைத்தூணில் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

1ஆம் கல்வெட்டு- இம்மடைத்தூணில் பாடல் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு மங்கலக்கோன் பாஞ்சாலராஜன் என்பவன் தன் பெயரில் மடை செய்வித்ததைக் கூறுகிறது. இவன், மன்னன் குலோத்துங்கசோழன், பாண்டிய நாட்டின் மீது மேற்கொண்ட போரில் கலந்து கொண்டவனாக இருக்கலாம் என சில அறிஞர்களால் கருதப்படுகிறது.

2ஆம் கல்வெட்டு- மதுரையில் இருந்த கைக்கோளன் செயமுடையான் விரதமுடிச்சானான பராக்கிரம சிங்கதேவன் என்பவன், தன் பெயரில் மடை செய்வித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

எனவே, சோழர் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட இம்மடை பாண்டியர் ஆட்சி காலத்தில் திருத்தி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

குறிப்புகள்
மதுரை மாவட்டக் கல்வெட்டு 1, பக்கம் எண்-98, 99
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன், உதயக்குமார்

முனைவர்.மீ.மருது பாண்டியன், உதயக்குமார்

முனைவர்.மீ.மருது பாண்டியன், உதயக்குமார்