Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மடைத் தூண் கல்வெட்டு

Sluice Pillar Inscription

அமைவிடம்

மாடக்குளம் என்ற ஊரின் குளத்தின் வடக்கு மடைத்தூணில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டு


ஊர்

மாடக்குளம்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
மாடக்குளத்தில் திருவாலைவாயன் என்ற சாய்ந்து கிடந்த மடைக்கல்லை (குளத்தின் வடக்கு மடைத்தூண்) மறுபடியும் எடுத்து நாட்டிய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. விறோதி வருஷம்

2. ஆவணி மா

3. தம் 29 தேதி திருவா

4. லைவாயன் ம

5. டைக் கல்லு

6. எடுத்து நாட்டி

7. வித்தான் திரு

8. வலை வாச்சி

9. அதிகாரி மகன்

10. ஆரியர் புத்திர

11. கணக்கு நாய

12. ன் பிள்ளை

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
இக்கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.கரு. இராசேந்திரன் அவர்களால் படி எடுக்கப்பட்டு ஆவணம் கல்வெட்டு இதழ் 15, 2004 இல் வெளியிடப்பட்டுள்ளது.
புகைப்படங்கள்

முனைவர் .ஆத்மநாதன்

முனைவர் .ஆத்மநாதன்