Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கண்மாய் கல்வெட்டு

Irrigation Tank Inscription

அமைவிடம்

ஆமூர் கண்மாய் கரையில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ் மற்றும் வட்டெழுத்து


காலம் / அரசன்

பாண்டியர்


ஊர்

ஆமூர்

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 9-10 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இக்கண்பாயில் அமைந்துள்ள மடைத் தூணில் கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு இம்மடையைச் செய்வித்தவனின் பெருமைகளைக் கூறுகிறது. இவன் பாண்டிய மன்னின் அதிகாரியாக விளங்கிய கலிதீரனின் தந்தை சாத்தன் என்று தெரிகிறது.

கல்வெட்டில்:

1. ஸ்ரீபாண்டியன்

2. செங்கோற் ப

3. ராந்தகனான..

4. ..தென்னவன்...

5. பேராரைசு கொ(ண்)

6. ட கலிதீரன் தந்தை

7. சாத்தன்கு...

8. ...லைத்தது...

9. இது காத்தான் கால் கீழ் (என்)

10. தலை

என்ற சொற்கள் வெட்டப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

குறிப்புகள்
மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக்கம் எண்-180
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்