Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

தமிழி / தமிழ் - பிராமிக் கல்வெட்டு

Tamili /Tamil - Brahmi Inscription

அமைவிடம்

சின்ன உண்டாங்கல்லு என்ற மலையில் இராக்கிப்புடவு என்ற குகையில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழி/தமிழ் பிராமி


காலம் / அரசன்

சங்கக் காலப் பாண்டியர்கள்


ஊர்

விக்கிரமங்கலம்

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டுக்கு முன் 2 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இராக்கிப்புடவு என்ற குகையின் புருவத்தில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டில் 'வேம்பிற்ஊர் பேர் அய்அம் சேதவர்' என்று வெட்டப்பட்டுள்ளது. இதில் 'பேர் அயம்' என்ற சொல்லுக்கு சுனை, குளம் என்று பொருள் கொண்டால், 'பேர் அயம்' என்ற சொல் 'பெருங்குளம்' என்று பொருள் தரும். 'சேதவர்' என்ற சொல்லை 'செய்தவர்' என்று படித்தால், 'இப்பெருங்குளம் வேம்பிற் ஊரவையிரால் செய்யப்பட்டது' என்று இக்கல்வெட்டு பொருள் தரும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் ஊரவை இருந்தது சிறப்பாகும். இப்பகுதியில் பழமையான பாறை ஓவியமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
தகவல்

க.த. காந்திராஜன்

குறிப்புகள்
மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 154.§ தமிழ் பிராமி கல்வெட்டுகள், பக்கம் 45-46.
புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்