Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

தீபத்தூண் கல்வெட்டு

Lamp Pillar Inscription

அமைவிடம்

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் வழியில் 'தீபத்தூண்' ஒன்று இருப்பதைக் காணலாம்.


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

நாயக்கர் காலம்


ஊர்

திருப்பரங்குன்றம்

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு
கூடுதல் விவரங்கள்
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் வழியில் 'தீபத்தூண்' ஒன்று உள்ளது. இத்தூண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. நாயக்கர் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் தூணிலேயே எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டுக்கு மேல் உள்ள சிற்பத்தில், அனுமன் ஒரு கையை ஓங்கிக்கொண்டு முகத்தை இடதுபக்கம் திருப்பியவாறு உள்ளார். இத்தீபத் தூண் ஆண்டவனுடைய தலையின் உச்சியில் நாட்டப்பட்டிருப்பதாகவும், இதில் புண்ணியவான்கள் அனைவரும் விளக் கேற்றலாம் என்றும் அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இத்தீபத்தூணில் கார்த்திகை தோறும் ஊரிலுள்ள மக்கள் விளக்கேற்றி வருகிறார்கள்.

கல்வெட்டு:

1. உ. ஆண்டவ

2. ற் சிற உச்சி

3. மலையில்

4. (ப) கம்பம் தீ

5. நாட்டியதின்

6. பெரில் சகல

7. புண்ணிய வ

8. ன்களும் தி

9. பம் பொடலம்

10. சா சிவமயம்

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

புகைப்படங்கள்

சுந்தரவேல்

சுந்தரவேல்