Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

புலிக்குத்திப் பட்டான் நடுகல்

Memorial Stone for Battle Against Tiger

அமைவிடம்

கடமலைக்குண்டு கிராமத்திற்கு அருகில் கரட்டுப்பட்டியில் உள்ள விநாயகர் கோவில் வளாகம்


அளவு

3 அடி உயரம்


வழிபாடு

இல்லை


ஊர்

கரட்டுப்பட்டி

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
சிற்ப அமைதியின் அடிப்படையில், இது பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் புலியுடன் சண்டையிடும் காட்சி புடைப்புச் சிற்பமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இதைப் புலிக்குத்திப் பட்டான் நடுகல் என்றழைப்பர். வீரனின் இடுப்பில் குறுவாள் அல்லது வளரி போன்ற ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. வீரன் காதணியும் கொண்டையும் அணிந்துள்ளான். இந்த நடுக்கல்லில் காணப்படும் புலி, பாயும் நிலையில் தன் முன்கால்களைத் தாக்குதலுக்காக உயர்த்தியவாறு உள்ளது. வீரனும் ஈட்டியை ஓங்கியவாறு முன்னேரிச் சண்டையிடுகிறான். அவனது ஈட்டி, புலியின் முகத்தைத் தாக்குவதுபோல் சிற்பம் அமைந்துள்ளது. எனவே, இச்சண்டையின்போது வீரன் புலியைக் கொன்ற பிறகு தானும் இறந்திருக்கலாம் என்று கருத வாய்ப்புண்டு. வீரர்கள் புலி தாக்கி இறந்த இடத்தை இப்பகுதி மக்கள் ’கன்னாடு’ என்ற சொல் கொண்டு அழைக்கின்றனர்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்