Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

யானை குத்திப் பட்டான் நடுகல்

Memorial Stone for Battle Against Elephant

அமைவிடம்

நரியூத்து ஸ்ரீமஞ்சனப் பேச்சியம்மன் கோவில் வளாகம்


அளவு

4 அடி உயரம்


வழிபாடு

ஆம்


ஊர்

நரியூத்து

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
சிற்ப அமைதியின் அடிப்படையில், இது பொது ஆண்டு 15- 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்
கூடுதல் விவரங்கள்
யானையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடுகல் ஸ்ரீ மஞ்சனப் பேச்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ளது. இத்தகைய நடுகல்லை ’யானை குத்திப் பட்டான் கல்’ என்றழைப்பர். இந்நடுகல் இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மேலடுக்கில் வீரன் ஒருவன் தன்னுடைய கையில் வாளை உயர்த்திப் பிடித்துத் தன்னைத் தாக்க வரும் யானையை எதிர்கொள்ளத் தயாராக உள்ள காட்சியைப் புடைப்புச் சிறப்பாகச் செதுக்கியுள்ளனர். வீரன் தன் வலக்காலை மடக்கி, மண்டியிட்டது போல் காணப்படுகிறான். எனவே, இவ்வீரன் யானையுடன் சண்டையிட்டு இறந்திருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. இறந்த வீரனின் மனைவி சதி என்னும் உடன்கட்டை ஏறித் தன் உயிரை மாய்த்திருக்கலாம் என்பதை வெளிக்காட்ட, கீழ் அடுக்கில் வீரனும் அவருடைய மனைவியும் சேர்ந்து அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்