Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மாலை அம்மன் சிற்பம்

Mālai Amman Sculpture

அமைவிடம்

மாலை அம்மன் கோவில்


அளவு

5 அடி உயரம், 1.5 அடி அகலம்


வழிபாடு

இல்லை


ஊர்

அ.வாடிப்பட்டி

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 16 - 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்
கூடுதல் விவரங்கள்
இது ஒரே கல்லில் செய்யப்பட்ட வழிபாட்டுத் தூண் கல் ஆகும். கல்லின் நான்கு பக்கமும் நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றுள் வீரர்கள் சண்டையிடும் காட்சி, குதிரையேறும் வீரன், பொதுமக்கள், வீரர்களின் வீரச்செயல்கள், புராணக் கதைகள் ஆகியவை புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்லின் ஒரு பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இருவர் நின்ற கோலத்திலும் மற்றொருவர் அமர்ந்த கோலத்திலும் காணப்படுகின்றனர். இதற்கு மேலுள்ள அடுக்கில் இடப்புறமுள்ளவர் இரு கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தியபடி உள்ளார். வலப்புறமுள்ளவர் இரு கைகளையும் உயர்த்தியபடி நிற்கிறார். இதற்கு மேலுள்ள அடுக்கில், கையில் ஆயுதத்துடன் ஒரு காலை மடக்கியும் மறு காலை கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்த (சுகாசனம்) ஓர் உருவம் காணப்படுகிறது. கல்லின் மேல் பகுதியில் சிவலிங்கத்தின் இருபுறங்களிலும் சூரியனும் சந்திரனும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இத்தூண் கல்லுக்கு அருகில் பல கற்கள் ஒரே இடத்தில் பல வரிசைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

சி.மாணிக்கராஜ், ப.பிரதீப்

சி.மாணிக்கராஜ், ப.பிரதீப்

சி.மாணிக்கராஜ், ப.பிரதீப்