Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

குதிரை வீரன் நடுகல்

Horse-mounted Warrior's Hero Stone.

அமைவிடம்

தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில்


வழிபாடு

ஆம்


கல்வெட்டுகள்

இல்லை


ஊர்

தங்கம்மாள்புரம்

மாவட்டம்

தேனி

காலம் / அரசன்
பொது ஆண்டு 17-18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது
கூடுதல் விவரங்கள்
இது குதிரை வீரன் ஒருவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் ஆகும். நடுகல்லில் வீரன் ஒருவன் குதிரையின் மீது அமர்ந்தவாறு உள்ளான். அவன் வலக்கையில் பிடித்துள்ள வாளை ஓங்கிய படியும், இடக்கையில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும் இருக்கும் காட்சி புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. குதிரையின் முன்பக்கம் இரண்டு சிறிய மனிதர்களூம், இரண்டு பெண்களும், இரண்டு வீரர்களும் நின்ற நிலையில் புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் குதிரையின் பின்பக்கம், குடை பிடித்த படியும் சாமரம் வீசியபடியும் நான்கு வீரர்கள் உள்ளனர். இவர்களுக்குப் பின் துப்பாக்கியை ஏந்திய நிலையில் இரண்டு வீரர்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். இச்சிற்பக் காட்சியின் அடிப்படையில், இக்குதிரை வீரன் இப்பகுதியின் ஒரு குறுநிலத் தலைவனாகவோ அல்லது தளபதியாகவோ இருந்திருக்கலாம் எனக் கருதுவதற்கு வாய்ப்புள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

சி.மாணிக்கராஜ், ப.பிரதீப்

சி.மாணிக்கராஜ், ப.பிரதீப்