Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

வழிபாட்டுத் தூண் கல்

Worship Pillar Stone

அமைவிடம்

பொட்டியம்மன் கோயில் அருகில் உள்ள தனியார் நிலத்தில்


அளவு

7 அடி உயரம், 2 அடி அகலம்


வழிபாடு

இல்லை


ஊர்

தங்கம்மாள்புரம்

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
இந்த வழிபாட்டுத் தூண் கல், ஓர் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய, நான்கு கால் மண்டபத்தினுள் காணப்படுகிறது. இவ்வழிபாட்டுத் தூண் கல்லின் நான்கு புறமும் ஏழு முதல் ஒன்பது அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பக்கமும் உள்ள அடுக்குகளில் குதிரைவீரர்கள், வில் வீரர்கள், அவர்களூக்குக் குடை பிடிப்பவர்கள், சாமரம் வீசுபவர்கள், அவர்களை வரவேற்கக் காத்திருப்பவர்கள், பல்லக்குத் தூக்கிகள், புராணக்கதைகள் மற்றும் பிற நிகழ்வுகளும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. தூணின் மேல்பகுதி, கோவில் விமானத்தின் மேலடுக்கில் காணப்படும் சிகரம் மற்றும் கலசம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வழிபாட்டுத் தூண் கல் காலப்போக்கில் தரையில் சாய்ந்துள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

காணொலி

ப.பிரதீப்