Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

இந்திரன் சிற்பம்

Indra Sculpture

அமைவிடம்

க.புதுப்பட்டி கிராமத்திற்குக் கிழக்குப் பக்கம் உள்ள வயல்வெளியில் அமைந்திருக்கும் திருநீலகண்டேசுவரர் கோவில் அருகில்


அளவு

5 அடி உயரம், 1.5 அடி அகலம்


வழிபாடு

இல்லை


ஊர்

க.புதுப்பட்டி

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 10 - 11ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இது தேவர்களின் தலைவரான இந்திரனின் புடைப்புச் சிற்பமாகும். இந்திரன், தூக்கி நிறுத்திய தன் வலது முழங்கால் மீது லளிதமாக வலது முழங்கையை வைத்து, இடது கையைப் பக்கவாட்டில் ஒய்யாரமாக ஊன்றியவாறு (மகாராஜ லீலாசனம்) , தன் வாகனமான ஐராவதம் எனும் யானைமீது அமர்ந்துள்ளார். இச்சிற்பத்தில் இந்திரனுக்கு நான்கு கைகள் உள்ளன. அவரின் வலக்கைகளில் அங்குசம், வஜ்ரம் ஆகிய ஆயுதங்கள் உள்ளன. இடது முன் கையை யானை மீது வைத்துள்ளார், பின் கையில் அடையாளப்படுத்த முடியாத ஏதோ ஒரு பொருளை வைத்துள்ளார். இந்திரன் தலையில் மகுடம் அணிந்துள்ளார். சிற்பத்தின் இரண்டு புறமும் வெண்சாமரம் காடப்பட்டுள்ளது. யானையின் பின்பக்கம் வெண் கொற்றக் குடை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிற்பத்தின் மேல் பகுதியில் சூரியன் மற்றும் சந்திரன் வடிவங்களும், சிற்பத்தின் கீழ்ப் பகுதியில் பன்றி, புலி ஆகியவற்றின் உருவங்களும் காணப்படுகின்றன.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

பெ.பிரகாசம்

பெ.பிரகாசம்