Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

நடுகற்கள் தொகுதி

Collection of Hero Stones

அமைவிடம்

ஆரியபட்டியில் உள்ள கல்யாணக் கருப்புக்கோயிலின் வெளிப்புறத்தில்


அளவு

சிற்பம் 1) உயரம் 3.42 அடி, அகலம் 2.26 அடி

சிற்பம் 2) உயரம் 3.45 அடி, அகலம் 2.29 அடி


வழிபாடு

ஆம்


ஊர்

ஆரியபட்டி

மாவட்டம்

மதுரை

கதை
இவை ஒரு தந்தை, இருதாய் மக்களிடையே நடந்த சண்டையில் மாண்டவர்களுக்கு உறவினர்கள் வைத்த நடுகற்கள் என்ற செவிவழிச் செய்தி உள்ளது.
காலம் / அரசன்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
கல்யாணக் கருப்புக்கோவிலின் வெளிப்புறத்தில் இரண்டு நடுகற்கள் உள்ளன. இடப்புறமுள்ள முதல் நடுகல்லில் கணவனும் மனைவியும் கைகூப்பி வணங்கும் தோற்றத்தில் செதுக்கப்பட்டுள்ளனர். வலப்புறமுள்ள நடுகல்லில் உள்ள ஆணின் இடக்கையில் வேல் கம்பு உள்ளது. இந்நடுகல்லில் உள்ள பெண்ணின் உயரம் மிகக் குறைவாக உள்ளது. இவர்கள் நால்வருமே நீண்ட காதுகள், நிறைய அணிகலன்கள் மற்றும் கொண்டையுடன் / தலைப்பாகையுடன் காணப்படுகின்றனர். உசிலம்பட்டி வட்டாரத்தில் இன்றும் பலர் காது வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்