Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

நடுகற்கள் தொகுதி

Collection of Hero Stones

அமைவிடம்

ஊரின் புறப்பகுதி - ஆரியபட்டியிலிருந்து கண்ணியம்பட்டி செல்லும் பாதையில் வலப்புறம் திரும்பியவுடன் இடப்புறம் சிறு ஓடையைத் தாண்டி வயல் பகுதியில் உள்ளது.


வழிபாடு

ஆம்


காலம் / அரசன்

வரலாற்றுக் காலம்


ஊர்

ஆரியபட்டி

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் 6 நடுகற்கள் புடைப்புச் சிற்பமாக உள்ளன. முதல் இரண்டு நடுகற்களில் காணப்படும் ஆட்கள், குதிரையில் அமர்ந்து, வலக்கையில் வாளை ஏந்தியுள்ளனர். இவர்களுக்குச் சேவகர்கள் குடைபிடிப்பதால் குறுநில மன்னர்கள் போலக் காட்சி அளிக்கின்றனர். மூன்றாவது நடுகல்லில் ஆண் நின்ற நிலையில் இடக்கையில் கேடயமும் வலக்கையில் வாள் ஏந்திய படியும் தன் மனைவியுடன் நின்றபடி காட்சியளிக்கின்றான். மற்ற மூன்று நடுகற்களில் உள்ள ஆண்களின் வலக்கை இடுப்பில் வளரியை அணைத்துப் பிடித்தபடியும், இடக்கை ஈட்டியைப் பிடித்தபடியும் காட்சியளிக்கின்றன.

இவற்றை ஊர்மக்கள் பட்டவன் சாமியாக வழிபட்டு வருகின்றனர். பாட்டையாவின் வம்சாவளிகள் குலதெய்வ வழிபாட்டு நாளான மாசிப்பச்சைக்கு (மாசி மாதம்) விளக்குகள் வைத்து, பொங்கல், படையல் வைத்து வழிபடுகின்றனர். மற்ற நாட்களில் தேங்காய் மற்றும் பழம் வைத்தும் வம்சாவளிகள் வேண்டுதல் பொருட்டு வழிபடுவதுண்டு. ஆரியபட்டி ஊர்த்திருவிழாவின் போது கோடாங்கி அடித்துச் சாமி வெறியாட்டம் ஆடுகின்றனர்.
அளவு
1) குதிரைச் சிற்பம் – உயரம் 3.4 அடி, அகலம் 3.4 அடி

2) குதிரைச் சிற்பம் – உயரம் 3.11 அடி, அகலம் 3.2 அடி

3) இருமனைவியர் சிற்பம் – உயரம் 3.9அடி, அகலம் 2.6 அடி

4) ஈட்டிச் சிற்பம் – உயரம் 4 அடி, அகலம் 3.7 அடி

5) ஈட்டிச் சிற்பம் – உயரம் 4.6 அடி, அகலம் 2.5 அடி

6) ஈட்டிச் சிற்பம் – உயரம் 4.9 அடி, அகலம் 2.9 அடி

தகவல்

முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
(தகவல், பேய்க்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கல்)
புகைப்படங்கள்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்