Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

குதிரை வீரன் நடுகல்

Horse-mounted Warrior's Hero Stone

அமைவிடம்

செக்கானூரணி அருகில் பெட்ரோல் நிலையம் எதிரில் கண்மாய்க்கு முன்பு உள்ளது.


அளவு

2.34 அடி உயரம், 3.42 அடி அகலம்


கதை

திடியன் என்ற ஊரின் காவல் எல்லை முத்துப்பட்டி வரை இருந்துள்ளது என்ற செய்தியை முத்துப்பட்டிக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்தப் பகுதியைக் காவல் காத்து வந்த கல்யாணி என்பவர் பணியில் இருந்த போது கொல்லப்பட்டார். ஆகையால் இவரது வம்சாவளியினர் இக்காவல் வீரனுக்கு நடுகல் எழுப்பி வழிபட்டு வருகின்றனர்.


ஊர்

கொங்கர் புளியங்குளம்

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
இந்நடுகல்லில் சித்தரிக்கப்பட்டுள்ள ஆண் குதிரையில் அமர்ந்தவாறு வலக்கையில் வாளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, இடக்கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவாறு உள்ளான். சேவகர் ஒருவர் குதிரையின் பின்புறத்திலிருந்து குடை பிடித்தவாறு நின்றுள்ளார். வீரரின் மனைவி இடப்புறத்தில் குடுவை ஒன்றைப் பிடித்தபடி நின்றுள்ளார்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
(தென்கல்லக நாட்டில் நடுகற்கள்). அருண் பேய்க்காமன்
புகைப்படங்கள்

ராஜவேலு

ராஜவேலு