Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மாலையம்மன் வழிபாட்டுத்தூண்

Mālaiamman Workship Pillar

அமைவிடம்

மார்க்கையன்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ளது.


வழிபாடு

ஆம்


காலம் / அரசன்

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டு


ஊர்

மார்க்கையன்கோட்டை

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
’மாலையம்மன்’ என்றழைக்கப்படும் இந்த வழிபாட்டுத் தூண் கல், பல்வேறு புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தூணின் நான்கு பக்கமும், 3 அடுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல் தூணின் ஒரு பக்கதின் மேல் பகுதியில், ஒரு தலை மற்றும் 3 உடல்கள் கொண்ட உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆண் மற்றும் பெண் உருவங்கள் நின்ற கோலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாகவும், அதன் காரணமாக அவ்வீரர்களின் மனைவியர்கள் மேற்கொண்ட சதி என்னும் உடன்கட்டை ஏறிய நிகழ்வின் நினைவாகவும் எடுக்கப்பட்ட நினைவுத் தூண் கல்லாக இருக்கலாம். தங்களுக்காக உயிர் நீத்த வீரர்களை போற்றி புகழ்ந்து தெய்வமாக வணங்க வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் தோன்றிய நினைவுத்தூண்கள், காலப்போக்கில் வழிபாட்டுத் தூண்களாகிவிட்டன. தற்போது இந்த கல் தூணை ஊர் மக்கள் மாலை அம்மன் என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
அளவு
5 அடி உயரம்
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப பிரதீப்

ப பிரதீப்

ப பிரதீப்