Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

நடுகல்

Memorial stone

அமைவிடம்

சீலையம்பட்டியில் இருந்து தேனி செல்லும் சாலையில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் உள்ளது.


அளவு

3 அடி உயரம்


கல்வெட்டுகள்

சதிக்கல்லின் அருகில் நடப்பட்டுள்ள கல்லில் கல்வெட்டு காணப்படுகிறது. இது தேய்ந்த நிலையில் உள்ளதால் கல்வெட்டு கூறும் செய்தியை முழுமையாக அறிய முடியவில்லை.


ஊர்

சீலையம்பட்டி

மாவட்டம்

தேனி

காலம் / அரசன்
பொது ஆண்டு 17 -18 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
இந்த சக்திக்கல்லில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. சிற்பத்தின் இடதுபுறம் உள்ள ஆண், தன் வலக்கையில் குத்தீட்டி என்றழைக்கப்படும் வேல் கம்பு ஒன்றை மேல் நோக்கி உயர்த்திப் பிடித்தபடியுள்ளான் மற்றும் தன் இடக்கையை இடது தொடையில் வைத்தபடி உள்ளான். இவன் அர்த்த வைதஸ்திக ஸ்தானகம் என்றழைக்கப்படும் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளான. சிற்பத்தின் வலதுபுறம் உள்ள பெண், இவனது மனைவியாக இருக்கலாம். இது வீர மரணம் அடைந்த ஒருவனின் நினைவாகவும், அதன் காரணமாக அவன் மனைவி மேற்கொண்ட சதி என்னும் உடன்கட்டை ஏறிய நிகழ்வின் நினைவாகவும் எடுக்கப்பட்ட சதிக்கல்லாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சக்திக்கல்லில் காணப்படும் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் நீள் காதுகள், கொண்டை மற்றும் ஆபரணங்கள் காட்டப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப பிரதீப்

ப பிரதீப்