Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

வளரி விரன் நடுகல்

Valari warrior Hero stone

அமைவிடம்

தோப்பூர் கிராமத்தின் கிழக்குப் பகுதியில்


வழிபாடு

ஆம்


காலம் / அரசன்

பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு


ஊர்

தோப்பூர்

மாவட்டம்

விருதுநகர்

கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல் புடைப்புச் சிற்பத்தில் வீரன் ஒருவன் தன் வலக்கையில் நீளமான வாளையும் இடக்கையில் வளரி ஒன்றையும் பிடித்தவாறு தன் மனைவியுடன் பீடத்தில் அமர்ந்துள்ளான். இது போரில் மாண்ட வீரனுக்கும், உடன்கட்டை ஏறிய அவன் மனைவிக்கும் எடுக்கப்பட்ட நடுகலாக இருக்கலாம். இவ்விருவரின் அணிகலன், கொண்டை, நீள்காதுகள், ஆடை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இச்சிற்பம் பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால சிற்பமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வூர் மக்கள் சிலர் இதை மருதுபாண்டியர் சிலை என்று அழைக்கின்றனர்.
அளவு
2 அடி அகலம், 3 அடி உயரம்
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்