Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

சிற்பத் தொகுதி

Collection of sculptures

அமைவிடம்

காரியாபட்டியிலிருந்து தோப்பூர் செல்லும் வழியில்


அளவு

2 அடி உயரம், 1 1.5 அடி அகலம்


வழிபாடு

ஆம்


ஊர்

தோப்பூர்

மாவட்டம்

விருதுநகர்

கல்வெட்டுகள்
இவ்விரு சிற்பங்களின் கீழ்ப்பகுதியில் ஒரு தமிழ்க் கல்வெட்டு காணப்படுகிறது. இது தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது. எழுத்துகளை முழுமையாக படிக்க முடியவில்லை. எனினும், ‘…..அ(த்)திகுளம் 1950..’ என்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன.
கல்வெட்டின் மொழி / எழுத்து
தமிழ்
காலம் / அரசன்
பொது ஆண்டு 18ம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. இடப்பக்கமுள்ள சிற்பம் தலையில் கிரீடத்துடன் கைக்கூப்பிய ஒர் அரசன் போல உள்ளது. வலப்பக்கமுள்ள சிற்பம் தேய்ந்த நிலையிலுள்ள ஒரு நடுகல்லாகும். நடுகல்லில் காணப்படும் இரு நபர்களும் போர் வீரர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், வலதுபக்கமுள்ள வீரன் தன் வலக்கையில் வாளை உயர்த்திப் பிடித்தபடியும் மற்றொரு கையை நளினமாக இடையில் வைத்தபடியும் நின்றுள்ளான். இடப்பக்கமுள்ள வீரன் தனது இடக்கையில் ஈட்டியைப் பிடித்தபடியும் மற்றொரு கையை இடையில் வைத்தபடியும் செதுக்கப்பட்டுள்ளான். பொது ஆண்டு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்நடுகல், போர் வீரர்களாக விளங்கிய இவ்விருவரின் வீரத்தைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் இந்நடுகல்லை இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்