Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

யானை குத்தி பட்டான் நடுகல்

Memorial Stone for Battle Against Elephant

அமைவிடம்

தங்கம்மாள்புரத்தில் உள்ள பொட்டியம்மன் கோவில் அருகே உள்ள தென்னந்தோப்பில் உள்ளது.


அளவு

3.5 அடி உயரம், 2 அடி அகலம்


காலம் / அரசன்

பொது ஆண்டு 14- 15 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.


ஊர்

தங்கம்மாள்புரம்

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல், யானையுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த ஒருவரின் நினைவாக எடுக்கப்பட்டதாக இருக்கலாம். இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நடுகல்லின் மேலடுக்கில், வீரன் யானையுடன் சண்டையிடுவது போன்ற காட்சி புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. வீரன் தன் வலக்கையால் யானையின் துதிக்கையை பிடித்துள்ளான். தன் இடக்கையை இடது தொடையில் வைத்தபடி உள்ளான். கீழ் அடுக்கில் யானையுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த வீரனுடைய மனைவியர் இருவர் சதி என்னும் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்திருக்கலாம் என்பதை வெளிக்காட்டும் விதமாக வீரனுடன் இருவரும் பீடம் ஒன்றில் அமர்ந்தவாறு புடைப்புச் சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப பிரதீப்

ப பிரதீப்