Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

குதிரை வீரன் நடுகல்

Horse-mounted Warrior's Hero Stone

அமைவிடம்

வடுகபட்டிலிருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் வராக நதியின் தெற்கு கரையில் அமைந்துள்ள பாப்பாத்தி மடம் என்ற இடத்தில் உள்ளது.


அளவு

3 அடி உயரம், 1.5 அடி அகலம்


வழிபாடு

ஆம்


ஊர்

வடுகபட்டி

மாவட்டம்

தேனி

கதை
தேனி மாவட்டத்தில முக்கியமான ஊர்களில் ஒன்று பெரியகுளம். இவ்வூரில் இருந்து ஜெயமங்கலம் செல்லும் சாலையில் வடுகபட்டி என்ற இந்த பழமையான ஊர் அமைந்துள்ளது. நாயக்கர் காலத்தில் ஆந்திராவில் இருந்து இப்பகுதியில் வந்து குடியேறிய மக்கள் 'வருகை' என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இவ்வாறு வந்து குடியேறிய மக்கள் ஏற்படுத்திய குடியிருப்பு பகுதியே வடுகபட்டி என்று மருவியதாக சொல்லப்படுகிறது.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
இந்நடுகல்லில் காணப்படும் வீரன் குதிரையின் மேல் அமர்ந்தவாறு புடைப்பு சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளான். வீரன் தன் வலக்கையில் ஈட்டியையும் இடக்கையால் குதிரையின் கடிவாளத்தையும் பிடித்துள்ளான். வீரன் பெரிய கண்கள், முறுக்கிய மீசை, தலையில் கொண்டை, காதணிகள் மற்றும் கழுத்தணிகள் அணிந்தவாறு காணப்படுகிறான். சிற்ப அமைதியின் அடிப்படையில், இது நாயக்கர் காலத்தில் வாழ்ந்த படைத்தலைவன் அல்லது வீர மரணமடைந்த குதிரைவீரன் ஒருவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நடுகல்லை சிலர் விருமாண்டி என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

மு. அகிலன்

மு. அகிலன்

மு. அகிலன்