Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

சின்னமாயன் நடுகல்

Chinnamaayan Hero Stone Sculpture

அமைவிடம்

சின்ன வாகைக்குளம் கிராமத்தின் மந்தையின் மேற்கு பக்கம் உள்ளது.


வழிபாடு

ஆம்


கதை

பல காலம் முன்பு, சின்னமாயன் என்பவன் இவ்வூரில் நடந்த போட்டியில் தான் தோல்வியடைந்ததைத் தாங்க முடியாமல் இறந்து விட்டான். சின்னமாயனின் தாத்தா இவனது நினைவாக, ஒரு சுமைதாங்கி கல்லை எழுப்புகிறார். பின்னர், தங்கள் ஒரே குல வாரிசும் இறந்து விட்டதால் தனது நாக்கை பிடுங்கி அவரும் இறந்து விடுகிறார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பங்காளிகள் அனைவரும் சேர்ந்து சின்னமாயனுக்கு ஒரு நடுகல் எழுப்பி வழிபடுகின்றனர் என்றும் செவிவழிச் செய்தி உள்ளது.


ஊர்

சின்ன வாகைக்குளம்

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
பொது ஆண்டு 16-17ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
சின்னமாயனின் சிற்பம் ஒரு பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் காணப்படும் சின்னமாயன் கணுக்கால்வரை நீளும் ஆடையும் ஆபரணங்களும் தலையலங்காரமும் அணிந்துள்ளான். இச்சிற்பம் தற்போது வழிபாட்டில் உள்ளது. தை வருட பிறப்பு அன்று இங்கு கிடாய் வெட்டி வணங்குகின்றனர். இவ்விழாவின் சிறப்பு அம்சமாக கோடாங்கி தன் பத்து விரலையும் வாய்க்குள் வைத்து நாக்கு அசையாதவாறு வெறியாட்டம் ஆடுகிறார். இந்த நடுகல் அமைந்துள்ள இடத்தை பட்டவன் கோயில் என்றும், இந்நடுகல் தெய்வத்தை மாயத்தேவர் என்ற பெயரிலும் தற்போது மக்கள் வணங்கி வருகின்றனர்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ஆய்வாளர் அருண் குமார்