Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

நடுகல்

Hero stone

அமைவிடம்

கிண்ணிமங்கலத்தின் வடகிழக்குப் பக்கத்தில் இந்நடுகல் உள்ளது.


காலம் / அரசன்

வரலாற்றுக் காலம்


ஊர்

கிண்ணிமங்கலம்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல்லில் ஓர் ஆண் தன் ஈட்டியால் ஒரு பன்றியைக் குத்துவது போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வலப்புறம் காணப்படும் பெண் தன் இடப்பக்க இடுப்பில் ஒரு குழந்தையை வைத்தபடி நின்றுள்ளார். ஆணின் இடப்புறம் மற்றொரு பெண், தன் வலக்கையில் பூச்செண்டும் இடக்கையில் தண்ணீர்க்குடுவையும் வைத்தபடி நின்றுள்ளார். இவ்விரு பெண்களும் இவ்வாணின் மனைவியராக இருக்கலாம் என கருதப்படுகிறது. இது பன்றியுடன் சண்டையிட்டு வீரமரணமடைந்த ஆணுக்காகவும், இதனால் சதி என்னும் உடன்கட்டை ஏறிய அவன் மனைவி இருவருக்கும் எடுக்கப்பட்ட நடுகல் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அளவு
உயரம் 3.42 அடி, அகலம் 2.34 அடி
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ராஜவேலு

ராஜவேலு