Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

நடுகல்

Hero stone

அமைவிடம்

தெப்பத்துப்பட்டி விலக்கு அருகே சாலையோரம் உள்ளது


வழிபாடு

ஆம்


கதை

பானா மூப்பன்பட்டியைச் சேர்ந்த சிலர் இந்நடுகல்லை வழிபடுகிறார்கள். இச்சிற்பத்தை மாலையம்மானாக இப்பகுதி மக்கள் வழிபடுகிறார்கள். இங்குக் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கிடாய் வெட்டு நடைபெறும் என்று ஊர்மக்கள் கூறுகின்றனர்.


ஊர்

சக்கரப்பநாயக்கனூர்

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல்லில் ஆண் பெண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆண் வணங்கி நிற்கிறான். பெண், தன் கையில் பூச்செண்டு போன்ற ஒன்றைப் பிடித்துள்ளாள். இருவரும் புன்முறுவல் பூத்தவாறு, நிறைய அணிகலன்களுடனும், தலையில் கொண்டையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நடுகல்லின் ஓரங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நடுகல்லின் மேல் பகுதியில் கீர்த்தி முகம் காணப்படுகிறது. பானா மூப்பன்பட்டியைச் சேர்ந்த சிலர் இந்நடுகல் சிற்பத்தை மாலையம்மானாக வழிபடுகிறார்கள். இங்குக் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கிடாய் வெட்டு நடைபெறும் என்று ஊர்மக்கள் கூறுகின்றனர்.
அளவு
3 அடி உயரம் உள்ள நடுகல்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ராஜவேலு

ராஜவேலு

ராஜவேலு